5.11.14

கோவைதிருச்சி பேருந்து நிலையத்தில்
சுற்றித் திரிகிறதென்று
நாங்கள் அடையாளம் கண்டுகொண்டதை
தோள் பை மேஜிஷியன்தான்
சிறு சிறு சீட்டுகளாக
உருமாற்றிக் கையளித்தார்

வரைபடத்தின்
வெவ்வேறு பகுதிகள் போன்றதில்
ஒன்றிரண்டை காணாமலடித்தாலும்
சிதைவைப் பொறுத்து
உக்கிரமடைவாரென்று தெரியும்
அவரும்

இரு கையோடும்
ஸ்டீரியங்கைப் பற்றி
முன் வீற்றிருக்கும் தெய்வமே

கிழக்கின் ஹோல்டரில்
விளக்கு தன் கண் திறந்து
திடுக்கிடுவதற்குள்ளாக
யாதொரு குலைவும் நேராதபடிக்கு
நாம்
முன்னிருந்த இடத்திலேயே
வைத்துவிட வேண்டும்
இந்தக் கோவையை


No comments:

Post a Comment