2.11.14

மது - கவிதைகள்
i)

மூடியை
எதிர்க் கடிகாரச்சுற்றில்
திருகுவதுதான்
புட்டியை திறப்பது

முடிவில்
புட்டியிடம் பிதற்றிக்கொண்டிருந்தேன்

தலை சுற்றுகிறது
நீதான் என்னை
திறந்துகொண்டிருப்பதா

ii)

கடைவாய்ப் பற்களின்
துணைகொண்டு பிளக்கிறேன்
இறுக மூடிய
தகடும் சீஸாவுமான
உதடுகளை

நீங்கள் செவி மடுக்க
மௌனம் கலைத்து
இந்த
புட்டி நிறை பியர்
பேசவும்
எத்தனை இருந்திருக்கிறது

குறிப்பாக
என் குரலில்

2 comments:

  1. புட்டி என்னைத் திறந்து விட்டது !

    ReplyDelete
  2. வணக்கம் ரிஷபன் ஜி.. thank you so much.. :) :)

    ReplyDelete