4.8.11

பார்த்துக்கொண்டிருக்கிறேன்நினைத்திராத ஒரு சமயத்தில்
தவிக்க விட்டு
எழுதுவதை நிறுத்திக்கொண்டது
சின்ரெல்லாவின் பேனா

மை பகிர ஏதுவாய்
மறை கழல
திருகுகிறாள் மித்ரா
தன் பேனாவை

பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்
'கா' ஒன்று
பழமாகிக்கொண்டிருப்பதை

No comments:

Post a Comment