4.8.11

மீனாகிறேன்இரண்டு பக்கமும்
பற்களிருக்கும் சீப்பு போல
தோன்றவே செய்கிறது
உடல் நீத்த சிறு மீனின்
எலும்புக்கூடு

இரு உள்ளங்கைகளிடை வைத்து
மூடுகிறேன்
அது உடலாகிறது

எனக்குள் அலைந்து
நானே
மீனாகிறேன் 

நன்றி : கல்கி   

No comments:

Post a Comment