12.8.11

பால் நிலா'போடி, அது என்னோட நிலா..'
குரலில் வாளுருவி
கூரைவரை எகிறுவான்
குட்டி இளவரசன்

'அப்பா,
என்னோடதுனு சொல்லுப்பா..'என்று
கன்னத்தில்
கோட்டோவியமொன்றுருவாகும்வரை
பிறாண்டுவாள் குட்டி இளவரசி

கரைத்து
புட்டிகளில் ஆளுக்குக்கொஞ்சம்
பகிர்ந்தளிப்பதில் கழியும்
ராணியில்லா அரண்மனையில்
ராஜாவின் தேய்பிறை நாட்கள்.1 comment:

  1. ராணியற்ற பொழுதுகளின் பதிவு அதன் தாக்கத்தை அழகாகவே காட்டுகிறது.

    ReplyDelete