
பிள்ளைங்க சிந்தும்
உப்பு மழைச்சாரலெல்லாம்
சலவைக்கல்லு
தரையில உறையும்
கேவல்களின் வாசம் கலந்து
கூடத்துல காத்தும் அலையும்
டவுனாஸ்பத்திரி புதுசுதான்
காய்ச்ச சளின்னு வந்தா
கஷாயம் குடிச்சு சரி பண்ணிக்கும்
சரசுவதி பாட்டிக்கு
விறகொடிக்க காடு நொழையவும்
கூட வர அடம்பண்ணும்
பேரன் கிடக்குறான் படுக்கையா
மணிக்கட்டு பக்கத்துல
மறைஞ்சுகிட்ட நரம்பு
பாதத்துக்கும் மேல புடிபட்டதுன்னு
குத்தி வச்சிருக்கா செவிலி,
அவ பாடையில போக..
தூசி பட்டாலே தாங்காது - பேரன் மேல
ஊசி செருக
பொத்துக்கிட்டது கிழவிக்குத்தான்.
புலம்பறா.. புலம்பறா..
முள்ளு தைக்குமின்னு
மாட்டிவிடும் செருப்பு ரெண்டு
கழட்டி கெடக்கு - பேரன்
கட்டிலுக்கு கீழ!
முள்ளு தைக்குமின்னு
ReplyDeleteமாட்டிவிடும் செருப்பு ரெண்டு
கழட்டி கெடக்கு - பேரன்
கட்டிலுக்கு கீழ!
பாசம் தைத்த கவிதை..