19.9.11

உன்னீரிதழ் சேர்ந்தது ஓர் அட்சய பாத்திரம்

சொற்பமே கைவசமிருப்பதாய்
நம்புபவள் போல்
தயங்கி
எட்ட நிற்கும் நீ
புரிதல் வேண்டும்

உன்னீரிதழ் சேர்ந்ததுதான்
ஓர் அட்சய பாத்திரம்
என்பதை
அள்ளக்குறையாதது
அது படைக்கும் முத்தம்
என்பதை.

1 comment:

  1. உன்னீரிதழ் சேர்ந்ததுதான்
    ஓர் அட்சய பாத்திரம்

    அருமையான உருவகம்.

    ReplyDelete