16.9.11

புறாவானவள்வெறும் கூடுதான் அதுவெனில்
உயிர்
அவளுக்குள்ளிருந்தது போல
அப்படி துடிதுடித்துப்போனாள்,
உடல் வேறு தலை வேறென
பீங்கான் புறா உடைந்ததன் பொருட்டு.

கொஞ்சமே ஃபெவி க்விக் பிதுக்கி
மருந்திட்டதில் புறாவும்
சொஸ்தமான நொடி
அவள் றெக்கை விரிக்கத்திமிறியதையும்
இந்தயிடத்தில் குறிப்பிட்டாகவேண்டும்

1 comment:

 1. கொஞ்சமே ஃபெவி க்விக் பிதுக்கி
  மருந்திட்டதில் புறாவும்
  சொஸ்தமான நொடி

  உடைந்து ஒட்டப்பட்ட புறா அதன் பழைய பறத்தலற்று உள்ளூர ஒரு பயம் கவ்விக் கொள்ள முன்பிருந்த நேசம் இப்போது மிரட்சியாய்..
  அவள் றெக்கை விரிக்கத் திமிறியது சங்கடப்படுத்தும் நிஜம்.

  ReplyDelete