19.9.11

பனித்துளி
பனித்துளி,
புல்லின் விரலில்
வெள்ளிக்கல் மோதிரம்
அணிவிக்கும்

இலைக்கண்ணில்
ஆனந்தக்கண்ணீர் பெருக்கும்

பூவிதழின் சருமத்தில்
முத்தாய் வியர்க்கும்

கொடியில்
கொஞ்ச தூரம் சறுக்கும்.

பனித்துளி,
வயிறு நிரம்ப
வெய்யிலைத்திண்ணும்

வயிறு முட்ட
வெய்யிலைக்குடிக்கும்

வெய்யிலையுடுத்தி மறையும்
பனித்துளி.

2 comments:

  1. கொடியில்
    கொஞ்ச தூரம் சறுக்கும்.

    எல்லா வர்ணனைகளும் அழகென்றாலும் இந்த வரி என்னையும் பனித்துளி கூடவே சறுக்கி வேடிக்கை பார்க்க வைத்தது..

    ReplyDelete
  2. என் அன்பும் நன்றியும் ரிஷபன் ஜி.

    ReplyDelete