16.12.12

மூன்று கவிதைகள்


1)
எத்தனை இணக்கமாயிருக்கிறது
இந்த இருள்
இந்த நிசப்தம்
என்றுதான் எண்ணியிருந்தேன்

மின்தடை விலகும் நொடி
அந்தகாரம் இமை விலக்க
கண் திறந்து கூசுகிறது
குமிழ் விளக்கு

க்றீச் க்றீச் என
அலறித் தொலைக்கிறது
பறந்து
வெளியேறவும் வெளியேறாத
மூன்று றெக்கை பறவை.

2)
கிராமொஃபோனென
விரிந்திருக்கும் செம்பருத்தி

உள்ளிருந்து வெளியேகும்
ஒரு பாடல்
உடன் கொஞ்சம் இசைத்துணுக்குகள்.

3)
விமானம் என
கூவிச் சுட்டுகிறாய்

பரந்த வான்வெளியில்
நீந்திச் செல்லும்
உலோக திமிங்கல
மீனாகத் தெரிகிறது
என் கண்ணில்.

1 comment:

  1. இருப்பதை இருப்பதாய் காண்பவன் மனிதன். இருப்பதில் இன்னொன்றைக் காண்பவன் கவிஞன்

    ReplyDelete