15.7.11

இந்தக்கவிதையைமூடியே கிடக்கும்
கைவிடப்பட்ட வீட்டின்
ஜன்னல் கண்ணாடியுடைத்து
கம்பியில் பட்டு
மீள்கிறதொரு பந்து

கதிர்ப்பாதம் வைத்து
சூரியன்
உட்பிரவேசித்ததும்
இந்தக்கவிதையை
நீங்கள் அழித்துவிடலாம்.

No comments:

Post a Comment